Story netwest Story mobile sms
Home » » ஏலத்திற்கு வரவுள்ள விக்டோரியா மகாராணி பயன்படுத்திய காலுறைகள்

ஏலத்திற்கு வரவுள்ள விக்டோரியா மகாராணி பயன்படுத்திய காலுறைகள்

கடந்த 1870ம் ஆண்டில் விக்டோரியா மகாராணி பயன்படுத்திய ஒரு ஜோடிக் காலுறைகள், வடக்கு யார்க்க்ஷயரில் உள்ள லேபர்ன் பகுதியில் இருக்கும் டெனன்ட்ஸ் என்ற ஏல நிறுவனத்தால் நாளை ஏலம் விடப்படுகின்றது. 

பட்டுத்துணியினால் ஆன இந்தக் காலுறைகளில் விஆர் என்ற அரச முத்திரை, நூல் வேலைப்பாடுடன் பதிவு செய்யப்பட்டிருக்கும். விக்டோரியா ராணி சில முறைகளே உபயோகிக்கும் இது போன்ற ஆடைகளை தன்னிடம் பணி புரிபவர்களுக்கும், தனக்குப் பிரியமானவர்களுக்கும் பரிசளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 

இது போன்று அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்ட பொருட்களே சில சமயங்களில் ஏலத்திற்கு வருகின்றன என்றும், இந்தக் காலுறைகள் நிறம் மங்கி அணிந்தால் கிழிந்துவிடும் என்ற நிலையில் உள்ள போதும் இதனுடைய வரலாற்று முக்கியத்துவத்தால் 400 முதல் 600 பவுண்டுகள் வரை போகும் எனவும் ஏல நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். 

மேலும் ராணியின் அனைத்து உடைகளிலும் அரச முத்திரையான விஆர் என்ற குறியீடும் இருக்கும் என்று ஏல நிறுவனத்தினர் குறிப்பிட்டுள்ளனர். 

இதற்கு முன்னர் ஏலத்திற்கு வந்த ராணியாரின் பெரிய கால்சராய் 10,000 பவுண்டு விலைபோனது என்பது குறிப்பிடத்தக்கது. 
Share this article :
 
About | Contact Use | Facebook | Twittwe | Call us on ( +94 ) 755662677
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Design by : K. Siva
Email :sksiva.lk@gmail.com