Story netwest Story mobile sms

.

மீனின் வயிற்றுக்குள் பாம்பு: வாழைச்சேனையில் பரபரப்பு

சமையலுக்காக சந்தையில் கொள்வனவு செய்யப்பட்ட மீன் ஒன்றின் வயிற்றில் இருந்து பாம்பு ஒன்று இருந்த சம்பவம் வாழைச்சேனை பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாழைச்சேனை 5 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் ஏ.எம் வலிஹான என்பவர் செப்பலி வகை மீன் ஒன்றினை சந்தையில் வாங்கிச் சென்றுள்ளார். அவரது மனைவி சமையலுக்காக மீனை வெட்டியபோது மீனுக்குள் இருந்து ஒன்றரை அடி நீளமான பாம்பு ஒன்று இருந்துள்ளதைக் கண்டுள்ளார்.
 
இச்சம்பவத்தை பார்வையிட வந்த பிரதேச மீனவர்கள் மாரி காலங்களில் செப்பலி,கொய்,கொடுவா போன்ற மீன் இனங்கள் நீர்பாம்புகளை பிடித்துண்ணும் பழக்கம் கொண்டவை எனத் தெரிவித்தனர்.
 
அண்மையில் வாழைச்சேனையிலுள்ள பிரிதொரு வீட்டினுள் சமையலுக்காக அறுக்கப்பட்ட கொய் வகை மீனிலிருந்து புளுக்கள் வெளியாகியுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காட்டில் செய்கை பண்ணப்பட்ட 70 கஞ்சா மரங்கள் கைப்பற்றப்பட்டன

மட்டக்களப்பு மாவட்டத்தில் வட்டவான் அடர்ந்த காட்டுப்பகுதியில் மாவட்ட மதுவரி திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின்போது பாரியளவில செய்கை பண்ணப்பட்டிருந்த கஞ்சாசேனை கண்டுபிடிக்கப்பட்டதாக மாவட்ட மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி கே.தங்கராசா தெரிவித்தார்.

சோளம் செய்கைக்கு மத்தியில் பெரும் பாதுகாப்பான முறையில் அடர்ந்த யானைக்காட்டுப்பகுதியில் இக்கஞ்சாசேனை செய்கை பண்ணபபட்டிருந்தது.மாவட்ட மதுவரி அத்தியட்சகர் நடராஜா சுசாதரனின் பணிப்புரையின் கீழ் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

காட்டில் செய்கை பண்ணப்பட்ட மூன்று அடி உயரமான 70 கஞ்சா மரங்கள் கைப்பற்றப்பட்டன. ஒரு மரத்திலிருந்து 1 கிலோ கஞ்சாவை அறுவடை செய்யமுடியும். சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சா மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட கஞ்சாமரங்கள் இன்று மட்டக்களப்பு நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார். நேற்று அதிகாலை முதல் நேற்று மாலை வரை இச்சுற்றிவளைப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

112 ஆண்டுகளாக தொடர்ந்து எரியும் மின்விளக்கு

சாதரணமாக ஒரு மின்விளக்குக்கு 500 முதல் 1000 மணி நேரங்கள் வரை எரியும் திறன் உண்டு. எதிர்பாரதவிதமாக சில மின்விளக்குகள் அதனுடைய திறனையும் தாண்டி அதிக நாட்கள் ஒளிதந்து கொண்டிருக்கும். அதைக் கண்டே நாம் ஆச்சர்யப் படுவதுண்டு.

ஆனால் 112 ஆண்டுகளாக ஒரு மின்விளக்கு தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கிறது. இதை உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் நம்பித்தான் ஆகவேண்டும்.

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள லிவர்மோர் என்ற தீயணைப்பு நிலையத்தில் தான் இந்த அதிசய மின்விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. இந்த மின்விளக்கை உருவாக்கியவர் அடோல்ப் சைலெட் என்ற கண்டுபிடிப்பாளர்.

அடோல்ப் சைலெட் 2.5 வருடங்கள் கடுமையாக உழைத்து இந்த விளக்கை கண்டுபிடித்தார். இந்த விளக்கைப் போல மற்றொரு விளக்கை இனிமேல் யாரும் உருவாகவே கூடாது என்று நினைத்த அவர் அதன் தயாரிப்பு குறிப்புகளை எரித்துவிட்டார்.

மேலும் அவர் தனது குறிப்பில் இதைப் போன்ற வேறொரு விளக்கை இனி வரப்போகும் எந்த மனிதராலும் உருவாக்கமுடியாது என்று எழுதி வைத்துள்ளார்.

இந்த விளக்கைப் போல இன்னொரு விளக்கை உருவாகும் முயற்சியில் அறிவியல் அறிஞர்கள் அடங்கிய ஒரு குழு பல ஆண்டுகளாக முயற்சி செய்தும் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.

அடோல்ப் சைலேடால் 1901 ஆம் ஆண்டு எரிய வைக்கப்பட்ட இந்த மின்விளக்கு கடந்த 112 ஆண்டுகளாக எவ்வித பிரச்னையும் இல்லாமல் தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கிறது.

திருகோணமலையில் மரை இறைச்சியுடன் சிப்பாய் உட்பட மூவர் கைது

திருகோணமலை பகுதியில் மரை இறைச்சியுடன் மூன்று பேரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
நாய்களை கொண்டு வேட்டையாடி மரையை கோடரியால் வெட்டி இறைச்சிக்காக துப்பரவு செய்து கொண்டிருக்கும் வேளையில் கைது செய்ததாகவும் பொலிசார் குறிப்பி
ட்டனர்.
கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் படைச் சிப்பாய் எனவும் தெரிய வருகின்றது. அத்துடன் இவர்களை நாளை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாகவும் மொறவெவ பொலிசார் தெரிவித்தனர்.
(கிழக்கின் விடிவெள்ளி)

அனைவரையும் சரிசமமாக நடத்துவதே அரசின் கொள்கை – ஜனாதிபதி

நாட்டின் சலுகைகள் அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அனைவரையும் சரிசமமாக நடத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை எனவும் அவர் சுட்டிக்காட்
டியுள்ளார்.
அரசாங்கத்தின் தற்போதைய அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் மூலம் கிடைக்கும் பிரதிபலன்கள் சகலருக்கு ஒன்றாகவும் சமமாகவும் கிடைக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் தோட்டத் தொழிலாளர்களுக்காக அரசாங்கம் சிறப்பான வேலைத்திட்டங்களை செய்துள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார்.

மரண அறிவித்தல்-திரு.சோ.தியாகன்

காரைதீவு-06ம் பிரிவைச்சேர்ந்த திரு.சோமோ தியாகன் அவர்கள் இன்று காலமானார்.
அன்னார் பரமேஸ்வரியின் கணவரும்,  தீபா, சோபா, கோபி, பிரபு ஆகியோரின் தந்தையயும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 25.12.2013 மாலை 3.00 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்

மரண அறிவித்தல் -திருமதி சி. கண்ணம்மை

காரைதீவைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சின்னத்தம்பி கண்ணம்மை (ரஞ்சிதம் அக்கா) அவர்கள் லண்டனில் இன்று காலமானார். அன்னார் அமரர்  சின்னத்தம்பி (கயிலாயபிள்ளை) அவர்களின்  பாசமிகு மனைவியும், , சின்னக்கண்ணு , அமரர் சுதாநிதி மற்றும் கருணாநிதி ஆகியோரின் அன்புத்தாயாரும், பத்மலோஜினி மற்றும் சந்திரிகா ஆகியோரின் மாமியாருமாவார். அன்னாரின் ஈமக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

மரண அறிவித்தல்-திரு.நாகராசா-ரதீஸ்குமார்

காரைதீவை பிறப்பிடமாகவும் நற்பட்டிமுனை-01 ம் பிரிவை வசிப்பிடமாகவும் கொண்டதிரு.நாகராசா-ரதீஸ்குமார் (தொழிநுட்ப  உத்தியோகத்தர் வீதி அபிவிருத்தி அதிகாரசபை) அவர்கள் நேற்று 24-02-2014 அன்று அகால மரணமானார்.
அன்னார் நாகராசா-உமாதேவி அவர்களின் அன்பு மகனும், இந்திரசாந்தி(நீர்ப்பாசன திணைக்களம்) அவர்களின் அன்புக் கணவரும், அஸ்வர்யன், துசாரிகா, பிரணவி ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுரேஸ்குமார் (வன ஜீவராசி திணைக்களம்), காலம்சென்ற ரமேஸ்குமார்(ரவியன்), சரண்யா ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று 25.02.2014 மாலை 5.00மணியளவில் நற்பட்டிமுனை இந்து மயானத்தில் நடைபெறும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள்,  நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

மரண அறிவித்தல்-திருமதி.கமலாதேவி மகாதேவா

யாழ்பாணம் வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும் காரைதீவு-11 ம் பிரிவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.கமலாதேவி மகாதேவா அவர்கள் காலமானர்.
அன்னார் மகாதேவா(ஓய்வு பெற்ற மின்சார பரிசோதகர்) அவர்களின் அன்பு மனைவியும், தனுசியன் ( UN-Habitat, மன்னார்) , சியாமளா (ஆசிரியை விபுலாநந்த மத்திய கல்லூரி,காரைதீவு) ஆகியோரின் பாசமிகு தயாருமாவார்.அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று 04.03.2014 மாலை 4.00 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் நடைபெறும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

ஏலத்திற்கு வரவுள்ள விக்டோரியா மகாராணி பயன்படுத்திய காலுறைகள்

கடந்த 1870ம் ஆண்டில் விக்டோரியா மகாராணி பயன்படுத்திய ஒரு ஜோடிக் காலுறைகள், வடக்கு யார்க்க்ஷயரில் உள்ள லேபர்ன் பகுதியில் இருக்கும் டெனன்ட்ஸ் என்ற ஏல நிறுவனத்தால் நாளை ஏலம் விடப்படுகின்றது. 

பட்டுத்துணியினால் ஆன இந்தக் காலுறைகளில் விஆர் என்ற அரச முத்திரை, நூல் வேலைப்பாடுடன் பதிவு செய்யப்பட்டிருக்கும். விக்டோரியா ராணி சில முறைகளே உபயோகிக்கும் இது போன்ற ஆடைகளை தன்னிடம் பணி புரிபவர்களுக்கும், தனக்குப் பிரியமானவர்களுக்கும் பரிசளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 

இது போன்று அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்ட பொருட்களே சில சமயங்களில் ஏலத்திற்கு வருகின்றன என்றும், இந்தக் காலுறைகள் நிறம் மங்கி அணிந்தால் கிழிந்துவிடும் என்ற நிலையில் உள்ள போதும் இதனுடைய வரலாற்று முக்கியத்துவத்தால் 400 முதல் 600 பவுண்டுகள் வரை போகும் எனவும் ஏல நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். 

மேலும் ராணியின் அனைத்து உடைகளிலும் அரச முத்திரையான விஆர் என்ற குறியீடும் இருக்கும் என்று ஏல நிறுவனத்தினர் குறிப்பிட்டுள்ளனர். 

இதற்கு முன்னர் ஏலத்திற்கு வந்த ராணியாரின் பெரிய கால்சராய் 10,000 பவுண்டு விலைபோனது என்பது குறிப்பிடத்தக்கது. 
புதிதாகபதிக்கப்பட்டவை
Computer Tips

வைரஸ் தாக்கிய Pen drive ல் இருந்து பைல்களை மீட்டெடுக்க

தற்பொழுது தகவல்களை சேமிக்க பயன் படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள்.. மேலும் »

Post by : K.Siva | மேலும் செய்திகள் »
இன்றைய சொப்ட்வெயார்

KASPERSKY ஆன்டிவைரஸினை இலவசமாக பயன்படுத்துவது எப்படி?

கணினி உலகின் சிறந்த ஆன்டிவைரஸ் தொகுப்பான KASPERSKY ஆன்டிவைரஸினை இலவசமாக பயன்படுத்துவது எப்படி என்று தான் இந்த பதிப்பு. கணினியில் வைரஸின் தாக்கம் இல்லாமல் பாதுகாக்க தான் ஆன்டிவைரஸினை பயன்படுத்துகிறோம். ஆனால் அந்த ஆன்டிவைரஸினை பெற அதிக தொகையை செலுத்த வேண்டியுள்ளது. அப்படியே இலவச தொகுப்பினை பயன்படுத்தினாலும் அது அந்த அளவிற்கு கைக்கொடுப்பது இல்லை. அதே மாறி அப்டேட் செய்வதிலும் KASPERSKY ஆன்டிவைரஸ் சிறந்தது. மிக சிறிய சிறிய பைலாக அப்டேட் செய்துக்கொள்கிறது.

மேலும்»

#

 
About | Contact Use | Facebook | Twittwe | Call us on ( +94 ) 755662677
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Design by : K. Siva
Email :sksiva.lk@gmail.com